தைப்பொங்கல்

தைப்பூசம்

மாசிமகம்

சிவராத்திரி

பங்குனி உத்தரம்

வருஷப்பிறப்பு

சித்திராபூரணை விரதம்

வைகாசி விசாகம்

ஆனி உத்தரம்

ஆடி அமாவாசை

ஆடிப்பூரம்

வரலக்ஷ்மி விரதம்

விநாயகசதுர்த்தி விரதம்

ஸ்ரீ கிருஷ்ணஜெயந்தி

நவராத்திரி விரதம்

புரட்டாதிச்சனி விரதம்

கேதாரகௌரி  விரதம்

ஸ்கந்தஷஷ்டி விரதம்

தீபாவளி

கார்த்திகை விளக்கீடு

பிள்ளையார் பெருங்கதை

திருப்பள்ளியெழுச்சி

திருவெம்பாவை

ஐப்பசி மாத அமாவாசைக்கு முன் வரும் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை அதனடுத்த கார்த்திகை சுக்கிலப்பிரதமை இந்த நான்கு நாட்களும் தீபாவளி சம்பந்தப்பட்ட நாட்களாகும். தீபாவளி என்னும் சொல்லுக்கு தீபங்களின் வரிசை என்பது பொருள். உலகில் உள்ள எல்லா இந்துக்களும் இத்தினத்தைக் கொண்டாடுகிறார்கள். இது மிக மிகப் பழங்காலதிருந்த்தே இந்துக்களின் வாழ்க்கையோடு கலந்துபோன கொண்டாட்டமாகும்.


ஸ்ரீ கிருஷ்ண பகவான் நரகன் என்ற அசுரனை வதம் செய்தபோது அவனுடைய கடைசி வேண்டுகோளிற்கேற்ப தீபாவளிப்ண்டிகை கொண்டாடப்படுகிறது என்பது ஐதீகம். வட இந்தியாவில் சில இடங்களில் தீபாவளியன்று நரகாசுரனுடைய உருவங்களைக் கொளுத்தி கிருஷ்ண பகவானுடைய வெற்றியைக் கொண்டாடுவதுண்டு.


இத்திருநாளிலே எமது அக இருள் ஒழிந்து போக வேண்டுமென்றும், அக அழுக்கு இல்லாமல் போக வேண்டுமென்றும் நமது முன்னோர்கள் இக் கொண்டாட்டத்தைக் கொண்டாடினார்கள். நரகாசுரன் கண்ணனால் ஆட் கொள்ளப்பட்டபோது தன்னைப்போல் எல்லோரும் கண்ணன் திருவடிகளை அடையவேண்டுமென்று விரும்பினான். அனால் நம்மவரில் பெரும்பான்மையோர் அன்றைய தினத்தில்தான் குடியும் புலாலும் உண்டு அசுரர்களாக மாறி விடுகிறார்கள். அந்த நிலை மாறி அகத்தில் விளக்கு ஏற்றுவோமாக.


தீபாவளி

03.11.2021 புதன்கிழமை